செவ்வாய், 31 ஜூலை, 2012

ஈரோடு புத்தகத் திருவிழா

ஈரோடு மாநகர மக்கள் தங்களை  ஒரு அறிவு சார்ந்த  விழாவிற்கு தங்களை ஆயத்தமாக்கிக் கொண்டு வருகின்றனர். வரும் 3/8/2012 முதல் 14/8/2012 நடைபெறும்  இந்த திருவிழா மிகச்சிற்ந்த புத்தக கண்காட்சி என்றமட்டிலும் இல்லாமல் தங்கள்வீட்டு விசேஷமாகவே  நினைக்கின்றனர் 

உலகதரம்வாய்ந்த அரங்கங்கள், அறிவுசார் பெறியவர்களின் மாலை நேர சொற்பொழிவுகள் என பல நிகழ்வுக்காக தவம் கிடக்கிறோம்.

 மக்கள் சிந்தனை பேரவை சார்பாக நடத்தப்படும் 8 வது புத்தக கண்காட்சிக்கு அனத்து நண்பர்களையும் வரவேற்பதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன்.

வாருங்கள் வந்து அறிவு பசியையும் , செவிக்கு உணவையும் பெற்றுச்செல்லுங்கள்


 மேலும் நிகழ்வுகள் குறித்த விஷயங்களுக்கு இந்த வலைதளத்தை புரட்டவும்.

 சிறப்பு அம்சங்கள் : 200 ரூபாய்க்கு மேல் நூல்கள் வாங்கும் சிறுவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது , பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி பரிசு , மாணவர்களுக்கு நூல் வாங்க பணம் சேர்பதற்கு மலிவு விலை உண்டியல் இப்படி பல.....


திருவிழா ஆரம்பித்தவுடன் எனது அனுபவங்களை பகிர்கிறேன்.

 
காமிக்ஸ்புத்தகம் :இதனை சொல்லவில்லை என்றால் சிலர் என்னை காமிக்ஸ் கிடைக்காத நாட்டிற்கு பார்சல் செய்து விடுவார்கள். முத்து ,லயன்,CC காமிக்ஸ்கள் கிடைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இரண்டு தினங்களில் அது குறித்த அறிவிப்பு வரும்

 பிற்சேற்கை (2/8/2012)
 புத்தக திருவிழாவில் லயன் -முத்து கமிக்ஸ்கள் இதழ்கள் அரங்கம் எண் 125 -பல்லவி ஸ்ரீ பப்ளிகேஷன்ஸ் அன்ட் மாஸ் கம்யூனிகேஸன்ஸ் பி லிட்   மற்றும் அரங்கம் எண் 27,28 - ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ் - ஆகிய இடங்களில் கிடைக்கும்




8 கருத்துகள்:

  1. நண்பர் ஸ்டாலின்,

    தங்களின் அழைப்புக்கு நன்றி ....

    நான் சனிக்கிழமை மாலை (ஆகஸ்ட் நான்கு) வரலாம் என்று இருக்கிறேன்.

    தாங்கள் அங்கே இருப்பீர்களா ?

    பதிலளிநீக்கு
  2. வாருங்கள் நண்பரே! அவசியம் சந்திக்கலாம்.

    பதிலளிநீக்கு
  3. ம்ஹூம்! உங்கள் பதிவு என் ப்ளாக் லிஸ்டில் தானாக தெரியவில்லை! என்ன பிரச்சினை என்று எனக்கு புரியவில்லை! ஸ்டாலினின் முயற்சியால் ஸ்டால் கிடைக்க வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. கம்யூட்டர் தலை உங்களுக்கே வழி தெரியலைன்னா நாங்க என்னத்த சொல்லுறது.........

    பதிலளிநீக்கு
  5. அவ்வ்வ்வ்வ்வ்வ் நான் ரொம்ப மிஸ் பண்ணுறேன் :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருவதற்கு முயற்சி செய்து பாருங்கள். உங்கள் ஆரய்ச்சிக்கு அதிகமான நூல்கள் உதவுமே!

      "காலம் வரலாற்றுச்சுருக்கம் " என்ற நூல் அறிவியல் மேதை " ஸ்டீஃபன் ஹாக்கிங்" எழுதியது. படித்து பாருங்கள் மனிதர் அண்டம் தோன்றிய வரலாற்றை வியத்த்கு முறையில் விளக்கி இருப்பார். உங்களைப் போன்ற வரலாற்றுச்சுவடுகளுக்கு அற்புத விருந்தாக இருக்கும்

      நீக்கு
  6. நண்பரே,நமது காமிக்ஸ் வளர்ச்சிக்கு நீங்கள் எடுத்துள்ள முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்.அடுத்த படிக்கு நமது காமிக்ஸ் முன்னேற வாழ்த்துக்கள்.உங்களை போன்ற நண்பர்கள் இருக்கும் போது ,அதிக பேரை சென்றடைந்து மாதமிரு முறை வெளியாகும் நாள் வெகு தொலைவில் இல்லை.

    பதிலளிநீக்கு
  7. //மாதமிரு முறை வெளியாகும் நாள் வெகு தொலைவில் இல்லை//
    உங்கள் வாக்கு பளிக்கட்டுகம் நண்பரே!

    பதிலளிநீக்கு